யாழ்ப்பாணத்தை அடுத்து கிளிநொச்சியில் பரவும் கொடிய நோய்... பரிதாபமாக உயிரிழந்த இருவர்!

யாழ்ப்பாணத்தை அடுத்து கிளிநொச்சியில் பரவும் கொடிய நோய்... பரிதாபமாக உயிரிழந்த இருவர்!

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் கடந்த 2 வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (06-01-2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை அடுத்து கிளிநொச்சியில் பரவும் கொடிய நோய்... பரிதாபமாக உயிரிழந்த இருவர்! | Two People Died Due To Rat Fever In Kilinochchiகிளிநொச்சி - முழங்காவில் மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், காய்ச்சல், தசைநோவு, கண்சிவத்தல், சுவாசப்பிரச்சினைகள் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் வலியுறுத்தியுள்ளார்.