20 வயது Online வியாபாரி உயிர்மாய்ப்பு; இளைஞனுக்கு நடந்தது என்ன!
அலைபேசி ஊடாக online வியாபார செயற்பாட்டில் ஈடுபட்ட 20 வயது இளைஞன் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த முஹம்மட் நயீம் முஹம்மட் நப்லான் (வயது 20 ) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இளைஞன் விரக்தி அடைந்த நிலையில் ஒரு வகையான மாத்திரைகள் உட்கொண்டு சிகிச்சை பலனளிக்காமையின் காரணமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை மரணமடைந்துள்ளார்.
சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சவளக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த இளைஞன் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.
இளைஞரின் தந்தை தனது மகன் வெளிநாட்டில் தொழில் புரிவதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொண்டதாகவும் அதற்காக அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக சேர்த்ததாகவும் கூறப்படுகின்றது.
அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான அலைபேசி online ஊடாக புதிய வகை வியாபார உத்திகள் உருவாக்கப்பட்டு இளைஞர் முதல் பல்வேறு தரப்பினரை இலக்கு வைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேவேளை இந்த online வியாபாரம் சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதில் ஆர்வம் கொண்டு பல இளைஞர்கள் முதல் பலர் பங்கேற்று வருகின்றனர்.