வருடத்தின் ஆரம்பத்திலேயே உச்சத்தை தொட்டுள்ள தங்கத்தின் விலை

வருடத்தின் ஆரம்பத்திலேயே உச்சத்தை தொட்டுள்ள தங்கத்தின் விலை

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(03) தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 781,504 ரூபாவாக காணப்படுகின்றது.

வருடத்தின் ஆரம்பத்திலேயே உச்சத்தை தொட்டுள்ள தங்கத்தின் விலை | Today Gold Price In Sri Lanka24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 27,570 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 220,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 25,280 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 202,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,130 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 193,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 212,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வருடத்தின் ஆரம்பத்திலேயே உச்சத்தை தொட்டுள்ள தங்கத்தின் விலை | Today Gold Price In Sri Lankaஇதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 196,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.