
மத்தல வானூர்தி நிலையத்தில் 50 வானூர்தி சேவைகள் மாத்திரம்
கடந்த 2 மாத காலப்பகுதியினுள் மத்தல வானூர்தி நிலையத்தில் 50 வானூர்தி சேவைகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளதாக வானூர்தி முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்னர் நேர அட்டவணைக்கு அமைய வானூர்தி சேவைகள் மத்தல வானூர்தி நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படவில்லை.
கப்பல் மாலுமிகளை மாற்றுவதற்காகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று தமது சேவைக்காலத்தை நிறைவு செய்தவர்களை மீள தாயகத்திற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளுக்காக குறித்த வானூர்தி நிலையம் பயன்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் மத்தல வானூர்தி நிலையத்திற்கு வருகை தந்திருந்த வானூர்தி சேவைகளின் பிரதிநிதிகள், நேர அட்டவணைக்கு அமைய அந்த வானூர்த்தி நிலையத்தின் ஊடாக சேவைகளை மேற்கொள்ள விரும்பம் தெரிவித்துள்ளனர்.
இது தவிர சர்வதேச வானூர்தி சேவைகள் பலவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.