இலங்கையில் பண்டிகைக் காலங்களில் கேக் விற்பனையில் வீழ்ச்சி

இலங்கையில் பண்டிகைக் காலங்களில் கேக் விற்பனையில் வீழ்ச்சி

பண்டிகைக் காலங்களில் கேக் கொள்வனவு செய்யும் போது மக்கள் விலை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென அகில  இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

கடந்த வருடத்தை விட இவ்வருடம் கேக் விலையில் சிறிதளவு குறைவு காணப்படுவதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் பண்டிகைக் காலங்களில் கேக் விற்பனையில் வீழ்ச்சி | Cake Sales Drop During Festive Seasons Sri Lanka

பொதுவாக பட்டர் கேக் ரூ.900 – ரூ.1200 இடையே விற்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைத்திருக்கலாம்.

ஆனால் அவ்வாறான சந்தர்ப்பம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. கோதுமை மா, மாஜரின் விலைகளை அரசு தலையிட்டிருந்தால் குறைத்திருக்கலாம்.

மக்கள் அவதானமாக இருங்கள். குறைந்த விலையில் தெரிவு செய்வது மக்கள் கைகளில் தான் இருக்கின்றது.

சிலர் விலைகளை அதிகரித்தும் சொல்லலாம்.. மக்கள் சிந்தித்து செயல்படுங்கள்..” என்றார்