தமிழர் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட 26 வயது இளைஞன்!

தமிழர் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட 26 வயது இளைஞன்!

மட்டக்களப்பு - வாகரை பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு அதனை வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாகரை அம்மந்தன்வெளி பகுதியில் இருந்து இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட 26 வயது இளைஞன்! | Batticaloa 16 Yearsl Old Boy Arrested With Gun

இச்சம்பவத்தில் உள்நாட்டு தயாரிப்பான இந்த துப்பாக்கியை வைத்திருந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்திருப்பதாக விசேட அதிரடிப்படையினர் அவரை வாகரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.