விராட் கோலி படைத்த புதிய சாதனை

விராட் கோலி படைத்த புதிய சாதனை

அவுஸ்திரேலியாவுக்கு(Australia) எதிராக 100 போட்டிகளில் விளையாடிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி(Virat Kholi)  படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியா - இந்தியா(India)  அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று(14) ஆரம்பமாகியுள்ளது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்தியா களத்தடுப்பை தீர்மானித்தது. போட்டியில் 13.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் போட்டி தடைப்பட்டுள்ளது.

ind vs aus

இந்நிலையில் இந்தப் போட்டியில் களமிறங்கியதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 100-வது சர்வதேச போட்டியில் விராட் கோலி விளையாடி சாதனை படைத்துள்ளார்.

அதாவது டெஸ்ட், ஒருநாள், ரி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 100* சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதற்கமைய அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 100 போட்டிகளில் விளையாடிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

virat kholi

சச்சின் டெண்டுல்கர்(Sachin Tendulkar) அவுஸ்திரேலியாவுக்குஎதிராக 110 போட்டிகளில் விளையாடி அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.