வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் வாகன இறக்குமதி தொடர்பில்  உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்து குழப்பமடையத் தேவையில்லை என குறித்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே (Prasad Manage) குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 4-5 வருடங்களாக வாகனம் இன்றி எங்களது துறை வீழ்ந்துள்ளது.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Announcement Issued Vehicle Importers Association

இந்த ஆண்டு பேருந்துகள் மற்றும் லொறிகள் கொண்டு வரப்படும் என்றும், அதன்பிறகு ஏனைய வாகனங்களையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் விரைவில் கொண்டு வர முடியும் என்றும் நம்புகிறோம்.

தற்போது எந்தவொரு வாகனத்தையும் கொண்டு வர அரசாங்கத்திற்கு தீர்மானம் இல்லை. புதிய அரசாங்கத்தின் இந்த முடிவு மாறுமா என்று கூற முடியாது.

இந்நிலையில், தங்களிடம் உள்ள வாகனத்தை விற்பனை செய்வது தொடர்பில் யாரும் குழப்பமடைய வேண்டாம். வாகனங்கள் எப்போது கொண்டு வரப்படும் என அரசாங்கம் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Announcement Issued Vehicle Importers Association

எனினும், இது குறித்து அரசாங்கம் அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறான அறிவிப்பு வெளியாகும் வரை வாகன உரிமையாளர்கள் குறைந்த விலையில் வாகனங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.