உப்பு இறக்குமதிக்கு அனுமதி கோரும் தனியார் நிறுவனங்கள்
உள்நாட்டு உற்பத்தியில் உள்ள சவால்களை காரணம் காட்டி, உப்பு இறக்குமதிக்கு அனுமதி கோரி, சில தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளன.
உள்ளூர் உப்பு உற்பத்தியை பாதிக்கும் நடைமுறை சிக்கல்களால் இந்த கோரிக்கை எழுந்துள்ளதாக வர்த்தக மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தொழில் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆர்.எம். லங்கா சோட் லிமிடெட்டின் பொது முகாமையாளர் குணரத்ன இது தொடர்பில் தகவல் தந்துள்ளார்.
நாட்டில் தற்போது 12 மெட்ரிக் தொன் உப்பு இருப்பு உள்ளது, இது அடுத்த இரண்டு மாதங்களுக்கு நுகர்வு தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது.எவ்வாறாயினும், பாதகமான காலநிலை காரணமாக உப்பு உற்பத்தி குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..
எனவே தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைப்பதற்காக, உப்பை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியுள்ளதாக குணரத்ன கூறியுள்ளார்.
தற்போது போதிய கையிருப்பு உள்ள நிலையில், உப்பு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் சில வியாபாரிகள் விலையை உயர்த்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.