திடீர் பணக்காரர்களாகிய அரச அதிகாரிகள்: வவுனியாவில் சேகரிக்கப்படும் தகவல்கள்

திடீர் பணக்காரர்களாகிய அரச அதிகாரிகள்: வவுனியாவில் சேகரிக்கப்படும் தகவல்கள்

வவுனியாவில் (Vavuniya), செயற்படும் சிவில் சமூகக் குழுக்கள் அரச சிரேஸ்ட அதிகாரிகள் சிலர், திடீரென பணக்காரர்களாக மாறியமை மற்றும் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் விபரங்களை சேகரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஞாயிறு ஆங்கில இதழின் சிறப்பு செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சில அதிகாரிகளின் உறவினர்களும் குறுகிய காலத்திற்குள் பல சொத்துக்களுக்கு உரிமையாளர்கள் ஆகியுள்ளனர். சிலவேளையில் சொத்துக்களை பதிவு செய்வதற்கு உறவினர்களை, அரச அதிகாரிகள் பெயரளவில் பயன்படுத்துவதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும், மக்கள் எதிர்கொள்ளும் காணி அல்லது காணி சம்பந்தமான பிரச்சினைகள் என்று வரும்போது, சிரேஸ்ட அதிகாரிகள் மெத்தனமான அணுகுமுறையை கடைப்பிடித்து, அவற்றைத் தீர்ப்பதற்கு மாதக்கணக்கில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்துகின்றனர்.

திடீர் பணக்காரர்களாகிய அரச அதிகாரிகள்: வவுனியாவில் சேகரிக்கப்படும் தகவல்கள் | Sri Lankan Politicians Became Sudden Rich

அதேசமயம், புலம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போது, ஓரிரு நாட்களில் அவை தீர்க்கப்படுகின்றன.

எனவே, ஊழலற்ற நிர்வாகத்திற்கான உத்வேகத்தை புதிய அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிலையில், குறித்த சிவில் சமூகக் குழுக்கள், அத்தகைய சந்தேகத்திற்குரிய அதிகாரிகளின் விபரங்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.