வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (06) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை | Heavy Rain In The Northern And Eastern Provincesநாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.