பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையைச் சேர்ந்த நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரையில் ஹீரோ முதற்கொண்டு, பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம் | Popular Serial Actor Netran Passes Away Suddenly

மேலும் நேத்ரன் தன்னோடு இணைந்து நடித்த நடிகை தீபாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேத்ரனின் மகள்கள் இருவருமே தற்போது திரையுலகில் நடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்ரனின் மூத்த மகள் அபிநயா தன்னுடைய தந்தை கேன்சரால் போராடி வருவதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் கல்லீரல் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கண்டிப்பாக தன்னுடைய தந்தை புற்றுநோயில் இருந்து மீண்டு வருவார் என நப்புகிறோம். அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டார்.

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம் | Popular Serial Actor Netran Passes Away Suddenly

அறுவை சிகிச்சைக்கு பின்னர், வீட்டில் ஓய்வில் இருந்த நேத்ரன் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இந்த தகவல் சின்ன சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேத்ரன் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பொன்னி' சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருடைய மனைவி தீபா நேத்ரன், சன் டிவியில் ஒளிபரப்பாகி வேறு சிங்க பெண்ணே சீரியலில் ஹீரோவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நேத்ரன் மறைவை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.