ஆசிரியர் நியமனம் வழங்குவது குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

ஆசிரியர் நியமனம் வழங்குவது குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை 07 சந்தர்ப்பங்களில் பல்வேறு முன்மொழிவுகள் மூலம் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளின் கீழ் 150,000 இற்கும் அதிகமானவர்கள் சேவையில் ஈடுபடுகின்றனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் திறன் மற்றும் தொழிற் தகைமைகள் தொடர்பான சரியான மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் நியமனம் வழங்குவது குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | Development Officers Appoint To Teaching Serviceஅவர்களுக்கு ஆரம்ப உள்ளகப் பயிற்சிகள் சரியான வகையில் வழங்கப்படாமையாலும், முறைசார்ந்த வகையில் அப்பதவிகளுக்குரிய கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படாமையாலும் குறித்த அலுவலர்களுக்கு எதிர்பார்க்கப்படும் செயலாற்றுகையை அடைவதற்கு இயலாமல் போயுள்ளது.

அத்துடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 15,800 இற்கும் அதிகமானவர்கள் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பாக தற்போது பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

அதற்கமைய, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக நடவடிக்கைகளிலும், செயலாற்றுகை தொடர்பாகவும் தற்போது மேலெழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளை அடையாளங்கண்டு, அப்பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்து அதற்கான நிலைபேறான தீர்வுகளை முன்வைப்பதற்காக பிரதமர் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்கும் குறித்த குழுவுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கும் பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆசிரியர் நியமனம் வழங்குவது குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் | Development Officers Appoint To Teaching Service

அமைச்சர்கள் குழுவின் தலைவராக பிரதமர் செயற்படவுள்ளதுடன் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர், கல்வி மற்றம் உயர்கல்வி பிரதி அமைச்சர், தொழிற்கல்வி பிரதி அமைச்சர் ஆகியோர் அங்கம் வகிக்கவுள்ளனர்.

அதிகாரிகள் குழுவின் தலைவராக பிரதமரின் செயலாளர் செயற்டவுள்ளதுடன், பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், கல்வி மற்றும் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர், நிதி ஆணைக்குழுவின் செயலாளர், தேசிய வரவு செலவுத்திட்ட பணிப்பாளர் நாயகம், தாபன பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் நாயகம் - முகாமைத்துவ சேவைகள் திணைக்களம், இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் செயற்படவுள்ளனர்.