வாழைச்சேனையில் கொள்ளையர்களால் நிர்க்கதியில் வயோதிபர்

வாழைச்சேனையில் கொள்ளையர்களால் நிர்க்கதியில் வயோதிபர்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடியில் 80 வயதுடைய வயோதிபருக்கு சொந்தமான சில்லறைக்கடையில் திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

கடையில் அதிகாலை வேளையில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தையும் சுருட்டிச் சென்றுள்ளனர்.

வாழைச்சேனையில் கொள்ளையர்களால் நிர்க்கதியில் வயோதிபர் | Elderly Man Robbed By Robbers In Vazhachenaiகடையில் கிடைக்கின்ற வருமானத்திலேயே தனது குடும்பத்தை ஓட்டிச்சென்ற வயோதிபர் நிர்க்கதியான நிலையிலுள்ளார்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.