54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்!

54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 5 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்! | Immediate Transfers For 54 Senior Police Officersஇவர்கள் தவிர து தவிர 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ்.முத்துமால குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ் தெஹிதெனிய, நுகேகொட பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.