இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்

10 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க குடிவரவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான விலை மனுக்கோரலுக்கமைய, 7.5 இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகள் பெறப்பட்டுள்ளன.

இலத்திரனியல் கடவுச்சீட்டு கிடைக்கும் வரை சாதாரண கடவுச்சீட்டுகளின் அளவு போதுமானதாக இருக்காது என் கருதி இந்த கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு விலைமனு கோரப்படவுள்ளது.

எனினும் விலைமனு கோரலுக்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் | Sri Lanka E Passport System In Trouble

இந்நிலையில், அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை என திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.