தங்கச்சங்கிலியை பறிகொடுத்த தம்பதிகள் : முச்சக்கரவண்டி சாரதிகளின் நேர்மை : குவியும் பாராட்டு மழை

தங்கச்சங்கிலியை பறிகொடுத்த தம்பதிகள் : முச்சக்கரவண்டி சாரதிகளின் நேர்மை : குவியும் பாராட்டு மழை

இளம் தம்பதி தமது தங்கச் சங்கிலியை தவறவிட்ட நிலையில் அதனை கண்டெடுத்த முச்சக்கரவண்டி சாரதிகள் அவர்களிடம் ஒப்படைத்த நிலையில் அவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஹட்டன்(hatton) நகரில் இயங்கும் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்களே இவ்வாறு தமது நேர்மையை நிரூபித்துள்ளனர்.

சாமிமலை சின்ன சோலங்கந்தையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் புவனேஸ்வரன் தம்பதியர் தமக்கு உரித்தான இரண்டு பவுண் எடையுள்ள தங்க சங்கிலியை ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் இறங்கிச் சென்ற வேளை தவற விட்டு உள்ளனர்.

தங்கச்சங்கிலியை பறிகொடுத்த தம்பதிகள் : முச்சக்கரவண்டி சாரதிகளின் நேர்மை : குவியும் பாராட்டு மழை | Couple Lost Gold Chain Honest Three Wheeler Driverபதுளை(badulla) சென்று திரும்பியவேளை இந்த சம்பவம் சனிக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தவறவிட்ட சங்கிலியை கண்டெடுத்த டிக்கோயா பகுதியில் உள்ள ராமநாதன் குகேந்திரன், தம்பிராஜ் சின்னத்தம்பி ஆகிய இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் உரியவர்களிடம் அதனை கையளித்தனர்.

தங்கச்சங்கிலியை பறிகொடுத்த தம்பதிகள் : முச்சக்கரவண்டி சாரதிகளின் நேர்மை : குவியும் பாராட்டு மழை | Couple Lost Gold Chain Honest Three Wheeler Driver

இவர்களது நேர்மையை பாராட்டி பணம் வழங்க முற்பட்ட போது அவர்கள் பணம் வாங்க மறுத்து விட்டனர். அத்துட்ன் குறித்த தம்பதியினர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.