பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்!

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்!

இயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயமாகியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “தாய் சங்கத்தை உடைக்கவோ, பிரித்தெடுக்கவோ இல்லை. கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை திரையுலகினரே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது.

உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்க உள்ளது. புதிய நிர்வாகிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் ” எனத் தெரிவித்துள்ளார்.