மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

நாட்டில் தற்போது நிலவிவரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளமையால் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என மத்திய மாகாண விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இதேவேளை, காய்கறி சாகுபடியாளர்கள் தங்கள் பயிர்களை அறுவடை செய்வது மற்றும் தங்கள் காய்கறி வயல்களுக்கு உரமிடுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

மரக்கறிகளின் விலை தொடர்பில் வெளியான புதிய தகவல்! | Sri Lanka Bad Weather Vegetable Price Increaseமத்திய மாகாணத்தில் பல பகுதிகளில் மரக்கறிச் செய்கை வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடும் மழை மற்றும் வெள்ளத்தால் தக்காளி, பீன்ஸ், கத்தரி, பச்சை மிளகாய் ஆகிய பயிர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.