தொடருந்து திணைக்களம் வாகன சாரதிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை
தொடருந்து கடவைகள் ஊடாக வாகனங்களை செலுத்தும் போது கவனம் செலுத்துமாறு தொடருந்து திணைக்களம் சாரதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயத்தினை,தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொல குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களில் தொடருந்து கடவைகளில் பல வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரித்துள்ளது.

இந்நிலையில், தொடருந்து கடவைகளில் பயணிக்கும் போது வாகன சாரதிகள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என தொடருந்து திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.