பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றிய பெண் அதிகாரி திடீர் மரணம்

பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றிய பெண் அதிகாரி திடீர் மரணம்

கொழும்பு, கெஸ்பேவ, பொல்ஹேன பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலைய அதிகாரியாக கடமையாற்றிய பெண் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயாகல இந்துருவகொடவில் வசிக்கும் சாமிகா ருவானி லியனகே என்ற 48 வயதுடைய திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்றில் கடமையாற்றும் இப்பெண் நேற்று காலை வாக்களிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரியாக தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுடன் மேலும் 15 பெண் அதிகாரிகளும் பணியில் இருந்துள்ளனர். இரவு 7.40 மணியளவில் ஒரு அறையில் தங்கியிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றிய பெண் அதிகாரி திடீர் மரணம் | Officer Died Suddenly In The Polling Station Today

உடனடியாக அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரை சிகிச்சைக்காக பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் வாக்குச்சாவடி பணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.