பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் கவனம்
பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே விலை குறைப்பு வீதத்தை தீர்மானிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு முறையாக வழங்க பேக்கரி மற்றும் உணவக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்களா என்பது குறித்தும் ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விலை குறைப்பு தொடர்பில் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் என்பனவற்றை ஒரே நேரத்தில் கூட்டி கலந்துரையாடவுள்ளதாக வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.