தமிழர் பகுதியில் 2 வெதுப்பகங்களுக்கு அதிரடி சீல்!
மன்னாரில் உள்ள பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த 2 வெதுப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (08.11.2024) குறித்த வெதுப்பகங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளனர்.
அண்மைக் காலமாக குறித்த வெதுப்பகங்களை மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதித்து 12 குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.
இருப்பினும், அறிவிப்புக்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வெதுப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.