இன்றைய ராசி பலன்கள் - 07.11.2024

இன்றைய ராசி பலன்கள் - 07.11.2024

மேஷம்

வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்து மூலம் பூர்வீக சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். பிரபலமான நபரை சந்திப்பீர்கள்.

ரிஷபம்

வீடு கட்டுவதற்கான வங்கி கடனை பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் பெற்று கட்டுமான வேலையை ஆரம்பிப்பீர்கள். கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். மலர் வணிகம் செய்பவர்கள் விலை உயர்வால் மகத்தான பலன் பெறுவீர்கள். சந்திராஷ்டமம் நிதானமாக செயல்படுங்கள்

மிதுனம்

சகோதர உறவுகளால் சஞ்சலங்கள் அடைவீர்கள். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாகி அவஸ்தை படுவீர்கள். வயிற்றுக் கோளாறுக்கு மருத்துவமனை செல்வீர்கள். பண வரவுகளை பக்குவமாகக் கையாளுவீர்கள். வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்ல மறக்காதீர்கள். ஆடு மாடு வளர்ப்பதன் மூலமாக அபிரிமிதமான லாபத்தை அடைவீர்கள்.

கடகம்

விவசாயத் தொழிலில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். தோப்புக் குத்தகையின் மூலம் கணிசமான வருமானம் பெறுவீர்கள். தொழிற்சாலையில் உற்பத்தியை பெருக்குவீர்கள். வெளிநாட்டு பயணத்தில் உள்ள சிக்கலை தீர்ப்பீர்கள். கோயில் திருப்பணிகளுக்கு பண உதவி செய்வீர்கள். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள்.

சிம்மம்

எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொழிலில் இறங்கினால் வீண் விவகாரங்களில் மாட்டிக் கொள்வீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் சிலர் விபத்துக்களில் சிக்குவீர்கள்.

கன்னி

நம்பியவர்கள் கைவிட்டதால் மனவேதனை அடைவீர்கள். வேலை இடத்தில் செய்யாத தவறுக்கு திட்டு வாங்குவீர்கள். டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையே காண்பீர்கள். காதலியின் கோபத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். கடன்கள் அதிகரிப்பதால் கவலைப்படுவீர்கள்.

துலாம்

கையில் பணம் தாராளமாக புரண்டு காலரை தூக்கி விடுவீர்கள். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவீர்கள். அரசு, தனியார்துறை பணியாளர்கள் சிரமமின்றி வேலை பார்ப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்தால் பெருமைப்படுவீர்கள்.

விருச்சிகம்

பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மணமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை ஒவ்வொன்றாக விலக்குவீர்கள். குடும்ப நலனுக்காக பெண்களின் சேமிப்பை பெறுவீர்கள். நீங்கள் தொழிலில் செய்த முதலீட்டால் பல மடங்கு லாபம் அடைவீர்கள். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தில் வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை முனைப்புடன் செய்வீர்கள்.

தனுசு

மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்த திட்டமிடுவீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வீர்கள். உங்களை மதித்து உறவினர்கள் வீடு தேடி வருவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். அக்கறையாக பணியாற்றி அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மகரம்

உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவதால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். கூட இருந்து குழி பறிக்கும் முயற்சியில் இறங்கும் நபர்களை அடையாளம் காண்பீர்கள். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவீர்கள். பெண்களால் சின்ன சின்ன அவமானங்களை சந்திப்பீர்கள். கடுமையாக யாரையும் பேசாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

கும்பம்

உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் நீங்கள் செல்வாக்கு பெறுவீர்கள். அரசு வேலையில் சேருவீர்கள். கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்பபை பெருக்குவீர்கள். இருதய நோய் தாக்குதலுக்கு ஆளான மாமனாருக்காக செலவு செய்வீர்கள். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

மீனம்

மற்றவர்களுக்கு நல்லது செய்யப் போய் கெட்ட பேர் எடுப்பீர்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்களை சந்திப்பீர்கள். செய்யாத குற்றத்திற்கு நீங்கள் தண்டனை பெறுவீர்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்கினால் கஷ்டப்படுவீர்கள்.