அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனை

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனை

தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ள வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்காவிட்டால் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா(Harsha de silva) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

வாகனங்கள் இறக்குமதி மீண்டும் ஆரம்பித்தால், திறைசேறியினால் வரி வசூலிக்கப்படும் என்றும், எதிர்பார்த்தபடி ஊதியம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்திடம் கையளிக்கப்பட்ட திட்டத்தினால் வாகன இறக்குமதி மூலம் அறவிடப்படும் வரி மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி ஆரம்பத்தில் எதிர்பார்த்த மூன்று சதவீத பொருளாதார வளர்ச்சியை விட இந்த ஆண்டு ஒரு சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதால் திறைசேரிக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.