தங்க நகைகள் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

தங்க நகைகள் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக உயர்வடைந்த தங்க விலை மூன்று நாட்களாக குறைவடைந்து செல்கின்றது.

அந்தவகையில், இன்றைய (05.11.2024) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 802,163 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,300 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 226,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,950 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 207,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,770 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams)198,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 218,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க நகைகள் வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல் | Today Gold Price List Sri Lanka And World Marketஅதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 202,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.