தாயையும் சகோதரியையும் காயப்படுத்திய மகன்

தாயையும் சகோதரியையும் காயப்படுத்திய மகன்

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹந்தபானாகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மது போதையில் தனது தாயையும், சகோதரியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காயமடைந்த சகோதரி பொலன்னறுவை பிரதேசத்தில் வசித்து வந்துள்ள நிலையில் வெல்லவாய, ஹந்தபானாகல பிரதேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

தாயையும் சகோதரியையும் காயப்படுத்திய மகன் | The Son Who Hurt His Mother And Sisterஇதன்போது, சந்தேக நபர் மது போதையில் வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில் தனது சகோதரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் எல்லை மீறியதால் கோபமடைந்த சந்தேக நபர், வீட்டிலிருந்த கூரிய ஆயுதம் ஒன்றை பயன்படுத்தி தனது சகோதரியை பலமாக தாக்கியுள்ளார்.

இதனை அவதானித்த தாய், சந்தேக நபரான தனது மகனைத் தடுக்க முயன்ற போது சந்தேக நபர் தனது தாயையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

பின்னர், காயமடைந்தவர்கள் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, சந்தேக நபரான மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.