இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

நாட்ட்டில் எதிர்வரும் 6ஆம் திகதி 175,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில், 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும்,182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 85,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.