வீதியின் குறுக்கே வந்த மாடு... சிகிச்சை பலனின்றி துரதிஷ்டவசமாக உயிரிழந்த நபர்!

வீதியின் குறுக்கே வந்த மாடு... சிகிச்சை பலனின்றி துரதிஷ்டவசமாக உயிரிழந்த நபர்!

கலேவெல - மாத்தளை வீதியின் தலகிரியாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்விபத்து சம்பவம் நேற்று (02-11-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியின் குறுக்கே வந்த மாடு... சிகிச்சை பலனின்றி துரதிஷ்டவசமாக உயிரிழந்த நபர்! | Dambulla Cow Crossing Road Bike Accident Man Diedவிபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தலகிரியாவ சந்தியில் இருந்து மாதிபொல ஊடாக கலேவெல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் குறுக்கே வந்த மாடு மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து அருகில் இருந்த பாலத்தின் தூண் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீதியின் குறுக்கே வந்த மாடு... சிகிச்சை பலனின்றி துரதிஷ்டவசமாக உயிரிழந்த நபர்! | Dambulla Cow Crossing Road Bike Accident Man Died

விபத்தில் பெலிகமுவ - கலேவெவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தம்புள்ளை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.