தங்க விலையில் தொடர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் தொடர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக குறைவடைந்த தங்க விலை தொடர்ச்சியாக உயர்வடைந்த நிலையில் இன்று பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அந்தவகையில், இன்றைய (30.10.2024) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 817,556 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,840 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 230,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல் | Today Gold Price Rate In Srilanka And World Market

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 26,440 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 211,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 25,240 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 201,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 220,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல் | Today Gold Price Rate In Srilanka And World Market

அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 203,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.