மோட்டார் வாகன பதிவுத்திணைக்களத்தின் முக்கிய ஆவணங்கள் மாயம்

மோட்டார் வாகன பதிவுத்திணைக்களத்தின் முக்கிய ஆவணங்கள் மாயம்

மோட்டார் வாகனப்பதிவுத் திணைக்களத்திடம் இருந்த அச்சிடப்படாத 12 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் காணாமல்போயுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகனங்களின் 12 வெற்று புத்தகங்கள் காணவில்லை என அதிகாரி ஒருவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல்போன புத்தகங்களின் இலக்கங்கள் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த புத்தகங்களின் எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த புத்தகங்கள் மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகன பதிவுத்திணைக்களத்தின் முக்கிய ஆவணங்கள் மாயம் | 12 Blank Vehicle Registration Books Missingபுதிதாக அச்சிடப்பட்ட 1000 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் அலமாரியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 12 புத்தகங்கள் காணாமல்போயிருந்தும் அலமாரியின் கதவுகள் உடைக்கப்படாமல் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோட்டார் வாகன பதிவுத்திணைக்களத்தின் முக்கிய ஆவணங்கள் மாயம் | 12 Blank Vehicle Registration Books Missingகுறித்த அறைக்கு செல்லும் கதவு தெரியும் வகையில் சிசிடிவி கமராக்களும் செயல்படுவதால், அதன் மூலமும் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தக வாகன ஒதுக்கீட்டுப் பிரிவின் உதவி ஆணையரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.