ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ள மிகச் சிறந்த ஒரு தீர்மானம்

ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ள மிகச் சிறந்த ஒரு தீர்மானம்

பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களால் கைவிடப்பட்ட மற்றும் வேறு காரணங்களினால் அனாதரவான சிறுவர்களை பொறுப்பேற்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மூலம் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணங்களிலும் அதற்கென தனித்தனி நிலையங்கள் உருவாக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

இந்த தகவலை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதாரன பத்திரன தெரிவித்தார்.

மேற்படி நிலையங்களில் அத்தகைய கை விடப்பட்ட மற்றும் அனாதரவான சிறுவர்களை பொறுப்பேற்றுக் கொள்ளும் போது அவர்களிடம் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர்கள் அல்லது அவர்களை உறுதிப்படுத்தும் சான்றுகள் கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.