மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் பரிதாப மரணம்

மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் பரிதாப மரணம்

கம்பஹா, வெயங்கொடை, அலவ்வ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மேற்படி சிறுவன் தனது வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, சமையல் அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழ் பகுதியில் கையை வைத்துள்ள நிலையில் மின்சாரம் தாக்கிக் கீழே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர், சிறுவனின் தந்தை உடனடியாகச் சிறுவனை வதுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சேர்த்தபோது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் பரிதாப மரணம் | A Six Year Old Boy Died After Being Electrocutedசிறுவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை வதுபிட்டிவல வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் அத்தனகல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.