சொந்த மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

சொந்த மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சொந்த மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை | A Father Who Sexually Abused His Own Daughters

சந்தேக நபரான தந்தை தனது 15 மற்றும் 18 வயதுடைய இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் புலஸ்திகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான தந்தை தனது சகோதரியின் 15 வயதுடைய மகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.