இஸ்ரேலில் இரண்டாவது அமைச்சருக்கும் கொரோனா தொற்று

இஸ்ரேலில் இரண்டாவது அமைச்சருக்கும் கொரோனா தொற்று

இஸ்ரேலின் ஜெருசலேம் மற்றும் பாரம்பரியத்துறை அமைச்சர் ரஃபி பெரெட்ஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உறுதியாகியுள்ளது.

குறித்த அமைச்சர் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று சோதனையில் தனக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது இஸ்ரேலிய அமைச்சர் இவர் என்பதுடன் முன்னதாக சுகாதார அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மனும் கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

பெரெட்ஸின் நோயறிதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள் சுய-தனிமைப்படுத்த வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் அந்நாட்டு செய்திகளை தெரிவிக்கின்றன.