கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள ஹொங்கொங்கிற்கு சுகாதார அதிகாரிகள் குழுவை அனுப்பும் சீனா

கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள ஹொங்கொங்கிற்கு சுகாதார அதிகாரிகள் குழுவை அனுப்பும் சீனா

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் 07 சுகாதார அதிகாரிகள் கொண்ட குழுவை சீனா இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹொங்கொங்கிற்கு அனுப்பியுள்ளது.

60 பேர் கொண்ட குழுவின் முதல் உறுப்பினர்கள், கொரோனா வைரஸ் தொற்று குறித்த பரவலான சோதனையை அங்கு மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் கொரோனா வைரஸ் தாக்கம் முதன்முதலில் தோன்றிய வுஹானில் இருந்து ஆறு பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவும் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள பொது மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக பிரதான சுகாதார அதிகாரிகள் ஹொங்கொங்கிற்கு உதவிய முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்தமையினால் முன்னாள் பிரிட்டிஷ் காலனிதத்துவ நாடு மத்திய அரசிடம் உதவி கேட்டதாக ஹொங்கொங் தலைவர் கேரி லாம் சனிக்கிழமை தெரிவித்தார்.

ஹொங்கொங்கில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகளை செய்ய முடியுமா என்று அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஜூலை மாதத்தில் பரவும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாக அனைத்து வெளிப்புற கூட்டங்கள் மற்றும் பொது இடங்களில் முக்கவசங்களை அணிதல் போன்ற இறுக்கமான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது.

ஹொங்கொங்கில் கடந்த ஜனவரி முதல் 3,400 நோயாளிகள் அங்கு அடையாளம் காணப்பட்டுளள்துன் 33 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இது உலகெங்கிலும் உள்ள மற்ற முக்கிய நகரங்களை விட மிகக் குறைந்தளவிலான எண்ணிக்கை என்றாலும் புதிய தொற்றுநோய்களின் நாளாந்த அதிகரிப்பு கடந்த 11 நாட்களாக மூன்று இலக்கங்களில் உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

1997 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் காலனித்துவத்தில் இருந்து சீனக் கட்டுப்பாட்டுக்கு நகரம் திரும்பியதை அடுத்து சீனா கடந்த மாதம் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.