தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை : நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை : நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

நேற்று முன்தினம் (25) சடுதியாக அதிகரித்த விலையானது நேற்று (26) குறைவடைந்த நிலையில் இன்று (27.09.2024) மீண்டும் குறைவடைந்துள்ளது.

அந்தவகையில், இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 803,041 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 28,330 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 226,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை : நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் | Today Gold Price Rate In Sri Lanka World Market

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,970 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 207,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 24,790 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 198,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 213,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை : நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் | Today Gold Price Rate In Sri Lanka World Market

அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 197,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.