க.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி இதோ!

க.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி இதோ!

கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 30-09-2024ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த பெறுபேறுகள் முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி இதோ! | 2024 Gce Ol Exam Result Coming 30Th Released452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது.

இதன்படி, பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதும் doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.