வாக்களிக்க ஆர்வம் காட்டாத அம்பாறை மக்கள்; வெளிச்சோடிய வாக்களிப்பு நிலையங்கள்!

வாக்களிக்க ஆர்வம் காட்டாத அம்பாறை மக்கள்; வெளிச்சோடிய வாக்களிப்பு நிலையங்கள்!

இலங்கையில் 2024 ஆம் ஆண்டிற்கான 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை,பொத்துவில் , சம்மாந்துறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு சாவடிகளுக்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

528 வாக்களிப்பு நிலையங்களில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர்.

கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99,727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 184,653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188,222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது. மேலும்,தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பெப்ரல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

வாக்களிக்க ஆர்வம் காட்டாத அம்பாறை மக்கள்; வெளிச்சோடிய வாக்களிப்பு நிலையங்கள்! | People Of Ampara Not Interested In Voting

எனினும் இன்று காலை வாக்களிப்பு ஆரம்பமானபோதும் வாக்களிப்பு நிலையங்கள் மக்களின்றி வெறிச்சோடி காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வாக்களிக்க ஆர்வம் காட்டாத அம்பாறை மக்கள்; வெளிச்சோடிய வாக்களிப்பு நிலையங்கள்! | People Of Ampara Not Interested In Voting