ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (21.09.2024) விசேட பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில், பயணிகள் அதிகாலையில் வந்து தங்களுடைய இடங்களுக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3300 பஸ்களும் இன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.