தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடாத்த ஏற்பாடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடாத்த ஏற்பாடு!

சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடாத்த ஏற்பாடு! | Re Conduct Of Grade 5 Scholarship Examinationகடந்த 15ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது. வினாத்தாள் கசிந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை நடத்தியது.

அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையுடன் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , விசாரணை முடிவுகளின்படி செயற்படுமாறு ஜனாதிபதியும் அமைச்சரும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.