அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கோரிக்கை

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கோரிக்கை

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தொகுதி மட்டத்தில் தற்போதுள்ள அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் கிளை அலுவலகங்களையும் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைமை அலுவலகமும், தொகுதிக்கு ஒரு அலுவலகம் மட்டுமே காணப்படவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தெரிவித்தார்.முன்னதாக அமைக்கப்பட்ட மற்ற அனைத்து அலுவலகங்களையும் அந்தந்த கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் பொலிஸார் மூலம் அகற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கோரிக்கை | Discussion On Abolition Of All Electoral Offices

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 04.15 மணியளவில் ஆரம்பிக்கப்படும் எனவும், எண்ணப்பட்டதன் பின்னர் முடிவுகளை ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் தனது வாக்கை வாக்காளர் எவ்வாறு சரியாகக் குறிப்பிடுவது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்

“எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை எவ்வாறு சரியாக அளிக்க வேண்டும்.

 வாக்கினை ‘1’ என்றும் விருப்ப வாக்குகளை ‘2’ மற்றும் ‘3’ என்றும் குறிக்கலாம்.

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கோரிக்கை | Discussion On Abolition Of All Electoral Officesஒரு வாக்கை மட்டும் அளிப்பதற்கு, ‘1’ அல்லது ‘X’ எனக் குறிக்கலாம்.

எனினும், ஒரு வாக்கை அளிக்கும் போது ‘1’ மற்றும் ‘X’ என்ற இரண்டையும் குறிக்க வேண்டாம்.

‘X’ அடையாளம் இட்ட பின்னர் வேறு எந்த எண்ணையும் பயன்படுத்த வேண்டாம்.

1 2 3 4 5 6 போன்ற பல இலக்கங்களையும் குறிக்க வேண்டாம். அப்படியென்றால் அவ்வாறான அனைத்து வாக்குகளும் நிராகரிக்கப்படும்.” என்றார்.