பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் தண்டனை வழங்குமாறு வலியுறுத்தல்

பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் தண்டனை வழங்குமாறு வலியுறுத்தல்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வட்ஸ்அப் செயலி மூலம் ஆசிரியர் ஒருவரால் பகிரப்பட்டதாகப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பரீட்சை வினாத்தாள்களைப் புகைப்படம் எடுப்பது, காணொளியாகப் பதிவு செய்வது மற்றும் சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது போன்ற செயற்பாடுகள் திட்டமிட்ட குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குற்றஞ்சுமத்தியுள்ளார்.

பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் தண்டனை வழங்குமாறு வலியுறுத்தல் | Punishment Connection Exam Question Paper Leak

கடந்த காலங்களிலும் இவ்வாறு பரீட்சை வினாத்தாள்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன. இவ்வாறான சம்பவங்கள் மாணவர்களின் உளநலத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடாகும்.

இந்த விடயம் தொடர்பில் தெளிவானதொரு விசாரணையினை முன்னெடுத்து தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு பரீட்சைகள் திணைக்களத்திற்கு உள்ளது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.