இலங்கையில் கொடிய நோயால் பரிதாபமாக உயிரிழந்த 17 பேர்! வெளியான எச்சரிக்கை

இலங்கையில் கொடிய நோயால் பரிதாபமாக உயிரிழந்த 17 பேர்! வெளியான எச்சரிக்கை

இலங்கையில் தற்போது டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய அபாயம் நிலவுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் இதுவரையில் 38,167 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொடிய நோயால் பரிதாபமாக உயிரிழந்த 17 பேர்! வெளியான எச்சரிக்கை | 17 Peoples Died Sri Lanka Dengue Fever So Far 2024

அவர்களில் 9481 பேர் கொழும்பில் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கம்பஹாவில் 4390 நோயாளர்களும், களுத்துறையில் 2102 நோயாளர்களும் மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து 15973 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொடிய நோயால் பரிதாபமாக உயிரிழந்த 17 பேர்! வெளியான எச்சரிக்கை | 17 Peoples Died Sri Lanka Dengue Fever So Far 2024

இதேவேளை, வடமாகாணத்தில் இருந்து 4742 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.