வவுனியாவில் தேர்தல் விதி மீறல் முறைப்பாடு: கடைகளை அகற்றுமாறு அரச அதிபர் உத்தரவு!
வவுனியாவில் (Vavuniya) தேர்தல்முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்ட நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுமாறு மாவட்ட அரச அதிபரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா - மன்னார் வீதியில் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு முன்பாக வீதிக்கரையில் தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக மாவட்டத்தேர்தல் திணைக்களத்திற்கு முறைபாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய காவல்துறையினர் ,நகரசபைசெயலாளர், தேர்தல்திணைக்கள உத்தியோகத்தர்கள் இன்று குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.வியாபாரிகளோடும் கலந்துரையாடினர்.
அதற்கமைய ஜனாதிபதித்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இந்தப்பகுதியில் இயங்கிவந்த ஆறு வியாபாரநிலையங்களை தவிர்த்து புதிதாக அமைக்கப்பட்ட ஏனைய அனைத்து வியாபாரநிலையங்களையும் இன்று மாலை 6 மணிக்கு முன்பாக அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த உத்தரவினை மீறுபவர்கள் மீது தேர்தல்சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.