ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தற்காலிகமாக பூட்டு !
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை (University of Sri Jayewardenepura) தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இன்று (12) மாலை 6.00 மணி வரை தற்காலிகமாக இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6.00 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.