பெருந்தொகை கடனை திருப்பி செலுத்திய இலங்கை மத்திய வங்கி
இந்த ஆண்டின் (2024) முதல் ஆறு மாதங்களில் இலங்கை மத்திய வங்கி 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய ரிசர்வ் வங்கிக்கு கடன் செலுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ தரவு அறிக்கைகளில் இந்த விடயம் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய வங்கி 2001.43 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை
கடந்த ஆண்டு (2023) மூன்றாவது காலாண்டில் தரவுகள் முதலில் வெளியிடப்பட்டபோது, இந்திய ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை 2601.43 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
அதன் பின்னர் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய ரிசர்வ் வங்கிக்கு செலுத்தப்பட்டிருப்பதை இது காட்டுகின்றது.
இதற்கமைய, இந்திய ரிசர்வ் வங்கியும் இலங்கைக்கு அந்நிய செலாவணி வசதியை நீட்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.