பசறையில் பாக்கு மரத்தில் இருந்து வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பசறையில் பாக்கு மரத்தில் இருந்து வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பதுளை (Badulla) - பசறையில் பாக்கு மரத்தில் இருந்து தவறி கீழே வீழ்ந்து படுகாயமடைந்த 16 வயதுடைய சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை (08.09.2024) இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாக்கு மரத்தை வெட்டுவதற்காக குறித்த சிறுவன் பாக்கு மரத்தில் ஏறி நுனிப்பகுதியில் இருந்து மரத்தை வெட்டும் போது தவறி மரத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

இதன்போது, சிறுவன் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகப் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

பசறையில் பாக்கு மரத்தில் இருந்து வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு | Boy Died Falling From A Betel Nut Tree In Badulla

இதனை தொடரந்து, அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், சிறுவனின் சடலம், பதுளை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளைப் பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.