இலங்கை டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 37 ஆயிரத்து 233 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கை டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Increase In Number Of Dengue Patients In Sri Lanka

அதற்கமைய மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 490 ஆகும்.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது