ரணிலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது

ரணிலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பில் (Batticaloa) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில ரி 56 ரக துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். 

இந்த கைது நடவடிக்கை, இன்று (08.09.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் - கோரகளிமடு பிரதேசத்தில் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வருகை தருபவர்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு அனுப்பியுள்ளனர்.

இதன்போது, கூட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரை சோதனையிடும் போது அவரின் உடமையில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை ஒன்றை கண்டுபிடித்து மீட்டதையடுத்தே அவரை கைது செய்துள்ளனர். 

ரணிலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது | Person Arrested In Batti Ranil Event With Bullet

இதில் கைது செய்யப்பட்டவர், வாகரை - வம்மிவெட்டுவான் வீதியை சேர்ந்த 24 வயதுடைய கடற்றொழிலில் ஈடுபட்டு வருபர் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.